மேலும் செய்திகள்
சிட்டி கிரைம்
04-Dec-2024
வடக்கு கடற்கரை: மண்ணடி, லிங்குசெட்டி தெரு மற்றும் போஸ்ட் ஆபீஸ் தெரு சந்திப்பு அருகே, வடக்கு கடற்கரை போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, பைக்கில் சந்தேகத்திற்கிடமாக வந்த இருவரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால், அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டனர்.அதில், மார்ல்ப்ரோ, டேவிட், டாப் கன், இ.எஸ்.எஸ்.இ., உள்ளிட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள், 1,300 பாக்கெட்டுகள் இருப்பது தெரிய வந்தது.விசாரணையில், வியாசர்பாடி, இந்திராகாந்தி நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 55, பி.வி.காலனியைச் சேர்ந்த வேல்முருகன், 31, என்பது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
04-Dec-2024