மேலும் செய்திகள்
ரூ.3 லட்சம் மதிப்பு குட்கா ஆவடியில் பறிமுதல்
06-Sep-2024
திருத்தணி, சென்னை - -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே, எஸ்.பி., தனிப்படை போலீசார், நேற்று காலை, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த ஆந்திர மாநில பதிவெண் உடைய 'பொலீரோ' காரை நிறுத்தி, சோதனையிட்டனர். காரில், 17 செம்மரக்கட்டைகள் இருந்தன.கார் ஓட்டுனர் சித்துார், புதுார் கிராமத்தைச் சேர்ந்த கணேசன், 45, நடுமூர் ஜோதீஸ்வரரெட்டி, 44, ஆகிய இருவரையும் பிடித்தனர்.செம்மரக்கட்டைகளை, சித்துார் மாவட்டம், திருப்பதி அடுத்த பீலேரி பகுதியில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்றதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.திருத்தணி போலீசார், இருவரையும் கைது செய்தனர். பிடிபட்ட செம்மரக்கட்டைகளின் எடை, 1,000 கிலோ; மதிப்பு 10 லட்சம் ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர். இவை, திருத்தணி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
06-Sep-2024