உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி ஓட்டுனரிடம் மொபைல் போன் பறித்த இருவர் கைது

லாரி ஓட்டுனரிடம் மொபைல் போன் பறித்த இருவர் கைது

வடக்கு கடற்கரை:திருச்சி, துறையூர் தாலுகாவை சேர்ந்தவர் ரவிசந்திரன், 39. இவர், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில், கன்டெய்னர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.ரவிச்சந்திரன் கடந்த 18ம் தேதியன்று இரவு, வடக்கு கடற்கரை, ராஜாஜி சாலை, வ.உ.சி., சிலை பின்புறம் நின்று, மொபைல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள், ரவிசந்திரனிடம் நேரம் கேட்பது போல நடித்து, அவரிடமிருந்து மொபைல்போனை பறித்து சென்றனர். வடக்கு கடற்கரை போலீசார் வழக்கு பதிந்து, மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்ட தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் தெருவை சேர்ந்த மணிகண்டன், 36; சைதாப்பேட்டையை சேர்ந்த திலீப்குமார், 22 ஆகிய இருவரை கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன்மீது மூன்று குற்ற வழக்குகள் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை