உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிகிச்சைக்கு வந்த மூதாட்டியிடம் நகை திருடிய இருவர் கைது

சிகிச்சைக்கு வந்த மூதாட்டியிடம் நகை திருடிய இருவர் கைது

வியாசர்பாடிவியாசர்பாடி, சாமியார் தோட்டம், 1வது தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி, 65. இவர், நேற்று முன்தினம், மூட்டு வலி காரணமாக வியாசர்பாடி, இ.எச்., சாலையில் உள்ள ஆயுர்வேத மையத்திற்கு சிகிச்சை பெற சென்றார்.அங்கு பணியிலிருந்த துாய்மை பணியாளர் சுதா, அணிந்திருக்கும் நகைகளை கழற்றி வைத்துக்கொள்ளும்படி, மகாலட்சுமியிடம் கூறியுள்ளார்.அதை நம்பிய மகாலட்சுமி, இரண்டரை சவரன் தங்கச்செயின், மோதிரத்தை கழற்றி, தனது அருகில் வைத்தார்.அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் மீனாட்சி, மூதாட்டி மகாலட்சுமியின் கண்ணில் மருந்து ஊற்றினார்.மூதாட்டி மகாலட்சுமி சிறிது நேரம் கழித்து, கண் விழித்து பார்த்த போது, தனது நகைகள், மொபைல் போன் மற்றும் கைப்பை மாயமாகியிருந்தது.இதுகுறித்து, வியாசர்பாடி போலீசில் மகாலட்சுமி கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து, சிகிச்சை மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.அதில், ரெட்டேரி, லட்சுமிபுரத்தை சேர்ந்த மீனாட்சி, 27, சுதா, 38, ஆகியோர், நகையை திருடியது தெரிந்தது.போலீசார், அவர்களிடம் இருந்த தங்கச்செயின், மோதிரத்தை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை