உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.2.5 லட்சம் காப்பர் திருடிய இருவர் கைது  

ரூ.2.5 லட்சம் காப்பர் திருடிய இருவர் கைது  

கொடுங்கையூர், சென்னை, மின்ட், எம்.கே.டவரை சேர்ந்தவர் வினோத் போதா, 48; இவர் கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரில் எலக்ட்ரானிக்ஸ் குடோன் வைத்துள்ளார்.கீழ்தளத்தில் குடோன் செயல்பட்டு வந்த நிலையில், முதலாவது, இரண்டாவது தளத்தில் தற்போது வீடு கட்டி வருகிறார்.இந்நிலையில் நேற்று மர்ம நபர்கள் இருவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் சுற்றில் துளையிட்டு, அங்கிருந்த 2.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 350 கிலோ காப்பர் மெட்டல்களை திருடி சென்றனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட கொடுங்கையூரை சேர்ந்த சூர்யா, 23; எருக்கஞ்சேரியை சேர்ந்த ஐயப்பன், 21 ஆகிய இருவரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை