உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வாலிபரிடம் வழிப்பறி: காசிமேடில் இருவர் கைது

 வாலிபரிடம் வழிப்பறி: காசிமேடில் இருவர் கைது

சென்னை: காசிமேடு அருகே வாலிபரை தாக்கி பணம் பறித்த, இரண்டு ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். காசிமேடு, ஜி.எம்.பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன், 33; மீனவர். இவர், சிங்கார வேலன் நகர் சுரங்கப்பாதை அருகே, நேற்று காலை நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இருவர், சரவணனிடம் பணம் கேட்டு தகராறு செய்தனர். அவர் மறுக்கவே, இருவரும் அவரை பலமாக தாக்கி, அருகே கிடந்த பீர் பாட்டிலை உடைத்து கழுத்தில் வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின், சரவணனின், சட்டை பையில் இருந்த, 300 ரூபாயை பறித்து, கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர். இது குறித்து விசாரித்த காசிமேடு போலீசார், தீபத், 28, மற்றும் சஞ்சய், 25, ஆகிய இருவரையும் நேற்றிரவு கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை