உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.ஒரு கோடி நிலமோசடி வழக்கில் இருவர் கைது

ரூ.ஒரு கோடி நிலமோசடி வழக்கில் இருவர் கைது

ஆவடி, ஆநில மோசடிக்கு ஆள்மாறாட்டம் செய்ய ஆட்களை ஏற்பாடு செய்த இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். செங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த் குமார் ஜெயின், 58. இவர், ரசாயன வியாபாரம் செய்து வருகிறார். கிடங்கு அமைப்பதற்காக, கடந்த 2022ல் இடம் தேடி வந்தார். அப்போது, நிலத்தரகர் வாயிலாக, ஓட்டேரியைச் சேர்ந்த கமலா என்பவருக்கு சொந்தமாக, பொன்னேரி தாலுக்கா, விளங்காடுபாக்கம் கிராமத்தில், 67.5 சென்ட் நிலம் உள்ளதாகவும், அதற்கு, 1.10 கோடி ரூபாய் என விலை பேசியுள்ளார். அந்த இடத்தை, அவரது மனைவி சீமா ஜெயின் என்பவருடன் கூட்டாக சேர்ந்து வாங்க ஒப்பந்தம் போடப்பட்டு, முன் பணமாக, ஆறு லட்சம் ரூபாயை, கமலாவின் வங்கியில் செலுத்தியுள்ளார். இந்நிலையில், இடைத்தரகர்கள் சுகுமார், மகாராஜன், சுந்தர், சுப்பிரமணியன் ஆகியோர், கமலா போல் ஒருவரை ஆள்மாறாட்டம் செய்து மீதமுள்ள, 95 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு, 2022 ஏப்., 14ம் தேதி, பொன்னேரி துணைப் பதிவாளர் முன் ஆஜராகி, அனைத்து ஆவணங்களில் கையெழுத்து போட்டு நிலத்தை கிரையம் செய்து கொடுத்துள்ளனர். இந்நிலையில், நிலத்தின் உரிமையாளர் கமலாவின் மூத்த மகன் சிவகுமார் என்பவர், தன் தாய் போல் வேறு ஒருவரை ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ததாக பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹேமந்த் குமார் ஜெயின், இது குறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவில் கடந்த 2022ல் புகார் அளித்தார். புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான தனிப்படை போலீசார், இந்த மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளையராஜா, 49 மற்றும் திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் குமார், 35 ஆகியோரை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை