மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்...
11-Apr-2025
பெரம்பூர், பெரம்பூர், பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருபாகரன், 54. சொந்த வீட்டில் முதல் மாடியில் குடும்பத்துடன் வசிக்கிறார். வீட்டின் தரை தளத்தில், இவரது தம்பிகளான ஜெயக்குமார், 52 பெரியார் செல்வன், 48 ஆகியோர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்களுக்குள் சொத்து பிரச்னை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், சகோதரர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கிருபாகரனை தம்பிகள் தாக்கியுள்ளனர்.மேலும் தாங்கள் வளர்க்கும் நாயை அண்ணன் மீது ஏவி கடிக்க வைத்துள்ளனர். இதில் கிருபாகரனின் மர்ம உறுப்பை நாய் கடித்துள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருபாகரனுக்கு மர்ம உறுப்பில் இரண்டு தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயக்குமார் மற்றும் பெரியார் செல்வனை நேற்று கைது செய்தனர். மேலும் உறவினரான மணி என்பவரை தேடி வருகின்றனர்.
11-Apr-2025