மேலும் செய்திகள்
4 வாகனங்கள் எரிந்து நாசம்
01-Aug-2025
படப்பை, வண்டலுார் - வாலாஜாபாத் சாலை கரசங்கால் சந்திப்பு சிக்னலில், படப்பை மார்க்கமாக செல்வதற்கு, நேற்று மதியம் ஏராளமான வாகனங்கள் நின்றன. அப்போது, மண்ணிவாக்கத்தில் இருந்து படப்பை நோக்கி சென்ற தனியார் நிறுவன பேருந்து ஒன்று, சிக்னலில் நின்றிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள், ஒரு வேன் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனங்களில் வந்த, படப்பையைச் சேர்ந்த தேவி, 35, கணேசன், 30, ஆகிய இருவரும் துாக்கி வீசப்பட்டு, காயமடைந்தனர். ஒரு இருசக்கர வாகனம், பேருந்து அடியில் சிக்கி, ஒரு கி.மீ., துாரம் இழுத்துச் செல்லப்பட்டது. அதில், அந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதனால், வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. பின், அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள் ஓடிவந்து, தீயணைக்கும் கருவியால், தீயை அணைத்தனர். பின், காயம் அடைந்தவர்கள், '108' ஆம்புலன்ஸ் மூலம், குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Aug-2025