உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரவுடி கொலையில் மேலும் இருவர் பிடிபட்டனர்

ரவுடி கொலையில் மேலும் இருவர் பிடிபட்டனர்

ஆவடி: திருமுல்லைவாயில், நாகம்மை நகர், ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கோகுல், 30; ரவுடி. இரு வாரங்களுக்கு முன், கஞ்சா வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர், சமீபத்தில் வெளியே வந்தார். நேற்று (அக்.,27) இரவு, அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் ராஜேஷ், 31, வீட்டிற்கு சென்றார். அங்கு மது அருந்தி கொண்டிருந்த ராஜேஷ், திருநின்றவூர் நிர்மல்குமார், 29, வில்லிவாக்கம் சந்தோஷ், 30, ஆகியோரிடம், தனக்கும் மது ஊற்ற சொல்லி கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில், கோகுல் வைத்திருந்த கத்தி கீழே விழுந்தது. ராஜேஷ் அதை கையில் எடுத்து, கோகுலை குத்தி கொலை செய்தார். பின், திருமுல்லைவாயில் போலீசில் அவர் சரணடைந்தார். இந்நிலையில், தப்பியோடிய நிர்மல்குமார், சந்தோஷ் இருவரையும், போலீசார் இன்று (அக்.,28) கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை