உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 5 போன் திருடிய சிறுவன் உட்பட இருவர் கைது

5 போன் திருடிய சிறுவன் உட்பட இருவர் கைது

பெரம்பூர்,வியாசர்பாடி, மாணிக்க விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்வேலன், 54. தாய் சுலோச்சனா, 86. தாயை தனி அறையில் வைத்து பராமரித்து வரும் செந்தில்வேலன், இரவில் அவர் தங்கியுள்ள அறையை பாதுகாப்பாக பூட்டி விடுவது வழக்கம்.அதேபோல் கடந்த மாதம் 30ம் தேதி இரவு 10:30 மணியளவில், வீட்டை பூட்டி, மற்றொரு அறையில் துாங்கிவிட்டார்.மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்தபோது மர்மநபர்கள் இருவர், தாய் தங்கியிருந்த அறையின் பூட்டை உடைத்து கண்காணிப்பு கேமராவை உடைத்து, சுலோச்சனாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, பீரோவில் இருந்தது உட்பட ஐந்து மொபைல்போன்களை எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து செம்பியம் போலீசார் விசாரித்தனர். இதில், பெரம்பூரைச் சேர்ந்த பிரேம்குமார், 21, மற்றும் 16 வயது சிறுவன் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை