மேலும் செய்திகள்
எச்சரித்த உளவுத்துறை ரவுடிகள் மூவர் கைது
10-Mar-2025
சென்னை, பேசின் பாலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட குருசாமி நகர், ஐந்தாவது தெரு பகுதியில், கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.அதன்படி அங்கு சென்ற பேசின் பாலம் போலீசார், புளியந்தோப்பு, குருசாமி நகர் பகுதியை சேர்ந்த ராம்குமார், 32, என்ற சரித்திர பதிவேடு ரவுடியை, நேற்று கைது செய்தனர்.அதேபோல், புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், பல்வேறு வழக்குகளில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த, புளியந்தோப்பு, அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 'பாட்டில்' மணி, 20, என்ற நபரை, புளியந்தோப்பு போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
10-Mar-2025