உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலீசாரை தாக்கிய இரு திருடர்கள் கைது

போலீசாரை தாக்கிய இரு திருடர்கள் கைது

புளியந்தோப்பு, மொபைல் போன் திருடர்களை பிடிக்க சென்ற போலீசாரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். அண்ணாநகரை சேர்ந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன், 23. யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு படித்து வரும் இவர் நேற்று காலை, நண்பர்களுடன் சேர்ந்து புளியந்தோப்பில் உள்ள பிரியாணி கடைக்கு சாப்பிட சென்றார். மேம்பாலம் அருகே பைக்கில் வந்தபோது, இவர்களின் பின்னால் வந்த இருவர், எடிசன் வைத்திருந்த மொபைல் போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்து, எடிசன் அளித்த புகாரையடுத்து, அய்யப்பலிங்கம், மோகன்குமார், தீர்த்தமலை ஆகிய புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அம்பேத்கர் கல்லுாரி சாலை அருகே சந்தேகத்தின்படி இருவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது, அவர்கள் அய்யப்பலிங்கத்தை எட்டி உதைத்து தப்ப முயன்றனர். மற்றொருவர் காலி பீர் பாட்டிலால் தீர்த்தமலையை தாக்கினார். இதில், தீர்த்தமலைக்கு கையில் காயம் ஏற்பட்டது. பின், பொதுமக்கள் உதவியுடன் இருவரையும் போலீசார் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். பிடிபட்டவர்கள் புளியந்தோப்பைச் சேர்ந்த ஹர்ஷத், 21, சல்மான்பாஷா, 21 என்பது தெரியவந்தது. காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோதும், இன்ஸ்பெக்டர் அறை கதவில் இருந்த கண்ணாடியை, ஹர்ஷத் எட்டி உதைத்து உடைத்துள்ளார். இவர்களிடமிருந்து மூன்று மொபைல் போன்கள், சிறிய கத்தி, ஹோண்டா டியோ ஸ்கூட்டர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். போலீசார் இருவரும் ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை