உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் உரிமையாளர்கள் சங்க ஆண்டு விழா 132 மாணவ - மாணவியருக்கு உதவி

இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் உரிமையாளர்கள் சங்க ஆண்டு விழா 132 மாணவ - மாணவியருக்கு உதவி

சென்னை: இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் உரிமையாளர்கள் சங்கத்தின், 32வது ஆண்டு விழாவில், 132 மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் உரிமையாளர்கள் சங்கத்தின், 32வது ஆண்டு விழா, 'வெல்வோம் அறக்கட்டளை' யுடன் இணைந்து நலத்திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழாவாக, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவில், சங்கத்தின் உறுப்பினர்கள் 100 பேர், 1,999 ரூபாய் செலுத்தி, 'தினமலர்' நாளிதழின் ஆண்டு சந்தாதாரர்களாக இணைந்தனர். அவர்களுக்கு, 'தினமலர்' நாளிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த மாணவ - மாணவியர் 132 பேருக்கு, தலா 10,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அம்மாணவர்களின் கல்விச் செலவை, 'வெல்வோம் அறக்கட்டளை' ஏற்றது. மேலும், உறுப்பினர்களின் குடும்பத்திற்கு பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், சென்னை, மதுரை, சேலம் உட்பட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த, சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதேபோல், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்தும், 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங் கேற்றனர். மேலும், 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன உதிரிபாக விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இருசக்கர வாகன மெக்கானிக்குகள், உதிரி பாகங்களை தள்ளுபடி விலையில் வாங்கிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !