உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடிகர் சிவாஜி பிறந்த நாள் விழா 850 பேருக்கு குடை வழங்கல்

நடிகர் சிவாஜி பிறந்த நாள் விழா 850 பேருக்கு குடை வழங்கல்

வில்லிவாக்கம்: வில்லிவாக்கம் நடிகர் திலகம் சிவாஜி சமூக நல பேரவை சார்பில், மறைந்த நடிகர் சிவாஜியின் 98வது பிறந்தநாள் விழா, ரா.கிட்டு ஏற்பாட்டில் வில்லிவாக்கம், தேவர் தெருவில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற, அண்ணா நகர் மண்டல குழுத்தலைவர் கூ.பி., ஜெயின், பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்ற மூன்று மாணவியருக்கு, பேரவை சார்பில் மின்விசிறிகளை பரிசாக வழங்கினார். பருவ மழையை முன்னிட்டு, 94 மற்றும் 95வது வார்டுக்கு உட்பட சுகாதாரம், குடிநீர், மின் வாரிய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 850 பேருக்கு இலவசமாக குடைகள் வழங்கப்பட்டன. 1,000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பேரவை சார்பில், மறைந்த சிவாஜிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில், 95வது வார்டு கவுன்சிலர் சுதா, தி.மு.க., வட்ட செயலர் அகிலன், நிர்வாகி குபேந்திரன், சிவாஜி ரசிகர் சத்திய நாராயணன், வில்லிவாக்கம் வியாபார சங்க செயலர் ஆறுமுகம், முன்னாள் செயலர் ஜேம்ஸ், டாக்டர் சங்கரநாராயணன், சைக்கிள் கடை மணி, பிரசாந்த், மலர் கேட்டரிங் கிருஷ்ண மூர்த்தி, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை