உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திறந்தநிலை வடிகால்வாயை மூடுகால்வாயாக மாற்ற பெருங்குடி மண்டல குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

திறந்தநிலை வடிகால்வாயை மூடுகால்வாயாக மாற்ற பெருங்குடி மண்டல குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

உள்ளகரம், பெருங்குடி மண்டல குழு கூட்டம், தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில், நேற்று நடந்தது. மண்டல உதவி கமிஷனர் - பொறுப்பு, முரளி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:ஷெர்லி, 187வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: அய்யப்பன் நகரில், மின் கம்பிகள் தாழ்வாக தொங்குகின்றன. சபரி சாலை மின்மாற்றியை திறன் உயர்த்த வேண்டும். ஏரிக்கரை நடைபாதையில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.சபீனா, 188வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: வார்டு முழுதும் சேதமடைந்துள்ள மின் கம்பங்களை மாற்ற வேண்டும். விஜயநகரில் இருந்து கீழ்க்கட்டளைக்கு, எங்கள் வார்டு வழித்தடத்தில் சிற்றுந்து இயக்க வேண்டும்.லட்சுமி, 191வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: காந்தி தெரு, வீராத்தம்மன் கோவில் தெருவில், மழைக் காலத்திற்குள் வடிகால்வாய்களை சீரமைக்க வேண்டும். வார்டில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.விஸ்வநாதன், 181வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: கோடைக்காலம் என்றாலும், பகிங்ஹாம் கால்வாய் பகுதியில், கொசு மருந்து தெளிப்பதை முறையாக செயல்படுத்த வேண்டும்.தமிழரசி, 182வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால்வாய் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். வார்டில் உள்ள இறகுப்பந்து திறந்தவெளி அரங்கை உள் விளையாட்டு அரங்காக மாற்ற வேண்டும்.சர்மிளா, 185வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: திறந்த நிலையில் உள்ள வடிகால்வாய்களை, மூடுகால்வாயாக மாற்ற வேண்டும். உள்ளகரம், சுவாமிநகரில் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.அதற்கு, மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன் பதிலளைத்து பேசியதாவது:பெருங்குடி மண்டலத்தில், மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்படுகின்றன.வார்டு கவுன்சிலர்களும் மக்கள் தேவையை கேட்டறிந்து, அதிகாரி, அலுவலர்களுடன் இணைந்து நிறைவேற்றித் தரவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை