உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேளச்சேரியில் 107 நாய்களுக்கு தடுப்பூசி

வேளச்சேரியில் 107 நாய்களுக்கு தடுப்பூசி

வேளச்சேரி:அடையாறு மண்டலம், 178வது வார்டு, வேளச்சேரி, பாரதி நகரை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது ஏழு மாத குழந்தைக்கு, நேற்று முன்தினம், அவரது பாட்டி உணவு ஊட்டி கொண்டிருந்தபோது, தெரு நாய் குழந்தையை கடித்தது.அதேபோல், வேளச்சேரி, பேபி நகரில் விளையாடி கொண்டிருந்த அஷ்ரப்புல், 9, என்ற சிறுவனையும் தெரு நாய் கடித்தது. இருவருக்கும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.வேளச்சேரி ரயில்வே சாலையில் ஹோட்டல் கழிவுகள் கொட்டப்படுவதால், இந்த சுற்றுவட்டார பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன.இதனால், வேளச்சேரி மக்கள் பீதி அடைந்தனர். இது குறித்து, நம் நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியானது.இதையடுத்து, மாநகராட்சி கால்நடை டாக்டர் ஆதிரை தலைமையிலான மருத்துவ குழுவினர், போலீஸ் பாதுகாப்புடன் தெரு நாய்களை பிடித்தனர்.இதில், 177, 178 ஆகிய வார்டுகளில், 107 தெரு நாய்களுக்கு, ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. நான்கு நாய்களை பிடித்து, கருத்தடை அறுவை சிகிச்சைக்கு அனுப்பப்பட்டன. தடுப்பூசி போடப்பட்ட நாய்களுக்கு, ரேபிஸ் பாதிப்பு இருக்காது; வேளச்சேரியின் இதர பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு, அடுத்தடுத்த நாட்களில் தடுப்பூசி போடப்படும் என, கால்நடை டாக்டர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ