உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வள்ளலார் சர்வதேச மாநாடு அமைச்சர் சேகர்பாபு தகவல்

வள்ளலார் சர்வதேச மாநாடு அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை,'செ ன்னையில், 10,000 பேர் பங்கேற்கும் வள்ளலார் சர்வதேச மாநாடு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும்' என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: வள்ளலாருக்கு பெருமை சேர்க்கும் வகையில், வடலுாரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க, 99 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பல்வேறு நீதிமன்ற வழக்குகளுக்கு பின், மைய கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வருகிறது. முதற்கட்ட பணிகள் முடிந்து மையம், டிசம்பரில் வள்ளலாரின் சீடர்களுக்கு அர்பணிக்கப்படும். சென்னையில், 10,000 சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்கும் வள்ளலார் சர்வதேச மாநாடு, நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்தப்படும். இதில், 2,000 பெண்களும் பங்கேற்பர். இந்த மாநாட்டில் வள்ளலாரின் பெருமைக்கு புகழ் சேர்க்கும் 25 பேருக்கு பட்டயம் வழங்கப் படும். வள்ளலார் குறித்த நுாலும் வெளியிடப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை