வட்டப்பாறையம்மன் உத்சவம் நாளை துவக்கம்
திருவொற்றியூர், திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் வடக்கு முகம் நோக்கி மைய சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.ஆண்டுதோறும், சித்திரை மாதம் ஏழு நாட்கள் வட்டப்பாறையம்மன் உத்சவம் நடக்கும். அதன்படி, கொடியேற்றம், சுவாமி புறப்பாடு இருக்கும். இம்முறை சிறப்பு விமான வாகன புறப்பாடுகளுக்கு, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.இது குறித்து, கோவில் உதவி கமிஷனர் நற்சோணை கூறியதாவது: வட்டப்பாறையம்மன் உத்சவத்தில், இம்முறை வாகனங்களில் அம்மன் எழுந்தருள்வது போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏழு நாட்களும் ஏழு சிறப்பு மலர்கள் அணிந்து, ஏழு விமான வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதி உலா வருவார். உத்சவம் முடிந்த மறுநாள், அமாவாசை தினத்தில் பல ஆண்டுகளாக தடைபட்டிருந்த தியாகராஜர் பவனிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆண்டு முழுதும் அமாவாசை தினங்களில், அதிகாலை தியாகராஜ சுவாமி புறப்பாடு இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
அம்மன் அலங்காரம்
தேதி மாலை விமானம்20 சிவப்பு அரளி மாலை பவழக்கால் விமானம்21 வெள்ளை நிற புஷ்பம் கந்தர்வ விமானம்22 சிவப்பு விருக்ஷி புஷ்பம் புஷ்ப விமானம்23 பச்சை தவன புஷ்பம் அஸ்தமானகிரி விமானம்24 மஞ்சள் சாமந்தி புஷ்பம் சவுடால் விமானம்25 வெள்ளை சம்பங்கி புஷ்பம் புஷ்ப பல்லக்கு26 கதம்ப புஷ்பம் இந்திர விமானம்