மேலும் செய்திகள்
நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி வழிப்பறி
15-Mar-2025
அண்ணா நகரில் குடிநீர் வாரிய ஆபீஸ் மாற்றம்
10-Mar-2025
அரும்பாக்கம், அண்ணா நகர் மண்டலம், நெற்குன்றத்தில் துவங்கும் விருகம்பாக்கம் கிளை கால்வாய் அரும்பாக்கம், சூளைமேடு, எம்.எம்.டி.ஏ., காலனி வழியாக, 6 கி.மீ., துாரத்தில், அமைந்தகரை கூவத்தில் கலக்கிறது.முறையாக சீரமைக்காததால், இக்கால்வாய் முழுவதும், குப்பை கழிவு நிறைந்துள்ளதால், அவற்றை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:மாநகராட்சியின் அலட்சியத்தால், விருகம்பாக்கம் கால்வாயில் தொடர்ந்து, சுகாதார சீர்கேடு நிலவுகிறது.குறிப்பாக, அரும்பாக்கம், சூளைமேடு பாரி தெருவில், தரைப்பாலத்தில் பல நாட்களாக குப்பை தேங்கி, செடிகள் வளர்ந்துள்ளன.தமிழர் வீதியில் கால்வாய் இருப்பதே தெரியாத அளவிற்கு, செடிகள் வளர்ந்து காலி மனைபோல் காணப்படுகிறது.இதனால் நீரோட்டம் தடைபட்டு, கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று அபாயம் நிலவுகிறது.முட்புதர், குப்பை கழிவை விரைந்து அகற்றி, சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
15-Mar-2025
10-Mar-2025