மேலும் செய்திகள்
பைக் மீது லாரி மோதி சாப்ட்வேர் இன்ஜினியர் பலி
20-Mar-2025
மேடவாக்கம், மேடவாக்கம்- - மாம்பாக்கம் பிரதான சாலை, வீரபத்திரன் நகர் அருகில், சாலையோரம் ஆட்டோ மற்றும் ஈச்சர் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.அப்போது, மாம்பாக்கம் நோக்கி வேகமாக சென்ற தண்ணீர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது மோதியது.இதில், ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கி, முன் நின்ற ஈச்சர் வாகனம் மீது மோதியது. ஈச்சர் வாகனம், அங்கிருந்த மின் கம்பம் மீது இடித்தது.இதில், மின் கம்பம் சாய்ந்து, ஒயர்கள் அறுந்து விழுந்தன. வாகனங்களில் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.பின், வாகனங்களை பொக்லைன் இயந்திரம் வாயிலாக மீட்டு, மின்சார ஒயர்கள் சரிசெய்யப்பட்டன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இவ்விபத்து குறித்து, தண்ணீர் லாரி ஒட்டுநரிடம், போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
20-Mar-2025