வாசகர்கள் கருத்துகள் ( 1 )
A family drama with lot of sentimental dialogues and scenes .
சென்னை: அன்புமணிக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:வயது முதிர்வால் ராமதாஸ் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். இதைப் பயன்படுத்தி, குடும்பத்திலும், கட்சியிலும் அன்புமணிக்கு எதிராக உள்ள சிலர், ராமதாசை தவறாக வழிநடத்துகின்றனர்.மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்த அன்புமணியின் செயல்பாடுகளை, ராமதாஸ் அளவுக்கு புகழ்ந்தவர்கள் யாரும் இல்லை. அந்த காலகட்டத்தில், தமிழகத்தின் சார்பில் மத்திய அமைச்சர்களாக இருந்த, 13 பேரில் அன்புமணிதான் 'நம்பர் 1' என ராமதாஸ் பாராட்டினார். அதனால்தான் 2016ல் முதல்வர் வேட்பாளராக ராமதாஸ் அறிவித்தார்.அன்புமணி சர்வதேச விருதுகளை பெற்றபோது, ஆனந்த கண்ணீர் வடித்ததாக கூறினார். ஆனால், இப்போது அன்புமணியை அமைச்சராக்கியது தவறு என்கிறார். நேற்று முன்தினம் கூட, அன்புமணியை முதல்வராக்க வேண்டும் என்றவர், இன்று புரட்டி போட்டுள்ளார். லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பா.ம.க.,வை குறைத்து மதிப்பிட்டு பழனிசாமி கேலி செய்தார். வி.சி., காங்கிரஸ், தே.மு.தி.க.,வை அழைத்த பிறகுதான் பா.ம.க.,வை அணுகினார். அவருக்கு பாடம் புகட்டவே பா.ஜ.,வுடன் அன்புமணி கூட்டணி அமைத்தார்.
பா.ம.க., மாவட்ட தலைவர்கள், செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன், சென்னையை அடுத்த சோழிங்கநல்லுாரில், இன்று முதல் அன்புமணி ஆலோசனை நடத்த உள்ளார்.
A family drama with lot of sentimental dialogues and scenes .