உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீல் சேர் குண்டு எறிதல்: சென்னைக்கு வெள்ளி

வீல் சேர் குண்டு எறிதல்: சென்னைக்கு வெள்ளி

சென்னை, செங்கல்பட்டில் நடந்த மாநில அளவிலான பாரா தடகள போட்டியின் வீல் சேர் குண்டு எறிதல் போட்டியில், சென்னையின் பைசல் அகமது வெள்ளிப்பதக்கம் வென்றார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2025ம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பை போட்டிகள், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் நடந்து வருகின்றன. செங்கல்பட்டில் நடந்த பாரா தடகள போட்டியின், ஆண்களுக்கான வீல் சேர் குண்டு எறிதல் போட்டியில், சென்னையின் பைசல் அகமது, 5.50 மீட்டர் எறிந்து, வெள்ளிப் பதக்கம் பெற்றார். மதுரையின் கவுதமன் 6.33 மீட்டர் எறிந்து தங்கமும், தர்மபுரியின் நவீன் குமார் 3.58 மீட்டர் எறிந்து வெண்கலமும் வென்றனர். பெண்கள் பிரிவில், துாத்துக்குடியின் காயத்ரி 3.79 மீட்டர் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். சென்னையின் அக் ஷயா 3.78 மீட்டர் எறிந்து வெள்ளியும், துாத்துக்குடியின் மேலேஷ்வரி ரத்தினா 2.67 மீட்டர் எறிந்து வெண்கல பதக்கமும் வென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை