சென்னையில் பரவலாக மழை மணலியில் 15 செ.மீ., பதிவு
சென்னை,வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, சென்னையில் நேற்று முன் தினம் இரவில் பலத்த மழை பெய்தது. மணலியில் 15 செ.மீ., மழை பதிவானது. தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று முன் தினம் இரவில் மழை பெய்தது. திருவொற்றியூரில் நேற்று அதிகாலை, 2:00 - 4:00 மணி வரை கொட்டித்தீர்த்த மழையால், தாழ்வான பகுதிகளில், மழைநீர் தேங்கியது. தொடர்ந்து, நேற்றும் மாலை, 5:00 மணிக்கு கரு மேகங்கள் சூழ்ந்து, பலத்த மழை கொட்டித்தீர்த்தது.வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், ராமாபுரம், விருகம்பாக்கம், கே.கே., நகர், தி.நகர், எம்.ஜி.ஆர்., நகர் நெசப்பாக்கம், கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மழை காரணமாக இப்பகுதியில் சில இடங்களில் ஒரு மணி நேரம் வரை மின் தடை ஏற்பட்டதும் குறிப்பிடதக்கது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை, 8:30 மணி வரை பதிவான மழை அளவு விபரம்:
இடம் மழை அளவு செ.மீ., மணலி 15 ஆவடி 11ஜெயா பொறியியல் கல்லுாரி 9 மதுரவாயல், வானகரம், மணலி 8வளசரவாக்கம் 7 செங்குன்றம், அம்பத்துார் 06 சோழவரம், கோடம்பாக்கம், கொளத்துார், முகலிவாக்கம், புழல், திருவொற்றியூர், பெரம்பூர், எம்.ஜி.ஆர். நகர், நுங்கம்பாக்கம், கத்திவாக்கம், வில்லிவாக்கம் 05