உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கணவருடன் சென்ற மனைவி :கள்ளக்காதலன் தற்கொலை

 கணவருடன் சென்ற மனைவி :கள்ளக்காதலன் தற்கொலை

அம்பத்துார்: கணவருடன் அவரது மனைவி சென்றதால், கள்ளக்காதலன் தற்கொலை செய்து கொண்டார். பாடியநல்லுார், அங்காள ஈஸ்வரி கோவில் தெருவைச் சேர்ந்தவர் லுார்து சார்லஸ், 29; டிரைவர். திருமணமாகாத இவருக்கு 'பேஸ்புக்' எனும் வலைதள பக்கம் மூலம் கவுசல்யா, 27, என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. கவுசல்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு, லுார்து சார்லசுடன், சில மாதங்களாக அம்பத்துாரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். தொடர்ந்து, டிச., 17ம் தேதி கவுசல்யா கணவருடன் சென்றுவிட, மன உளைச்சலில் இருந்த லுார்து சார்லஸ், நேற்று முன்தினம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை