உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மதுபாட்டில்கள் பதுக்கிய பெண் கைது

மதுபாட்டில்கள் பதுக்கிய பெண் கைது

உத்திரமேரூர், உத்திரமேரூரில் 300 குவார்ட்டர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். குப்பைநல்லுார் கிராமத்தில் காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தன்று கள்ளச்சந்தையில் விற்க மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக, உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் குப்பைநல்லுார் கிராமத்தில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது, குப்பைநல்லுார் ரீட்டா, 48, என்பவர், அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே, 300 குவார்ட்டர் மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, உத்திரமேரூர் போலீசார் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, ரீட்டாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி