உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எலி மருந்து சாப்பிட்ட பெண் பலி

எலி மருந்து சாப்பிட்ட பெண் பலி

கொடுங்கையூர், கொடுங்கையூர், திருவள்ளுவர் நகர், ஆறாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் மணிமேகலை, 32. இவருக்கு திருமணமாகி, சபரி என்ற கணவரும், இரு பிள்ளைகளும் உள்ளனர்.சபரிக்கு குடிப்பழக்கம் இருப்பதால், அடிக்கடி மது அருந்து விட்டு, மனைவியுடன் வீண் தகராறு செய்வது வழக்கம். அதன்படி, 14ம் தேதி காலை, மது அருந்து விட்டு, வீண் தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதனால் விரக்தியடைந்த மணிமேகலை, வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மணிமேகலை உயிரிழந்தார். இதுகுறித்து, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை