உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பசு மாடு முட்டியதில் பெண் பலத்த காயம்

பசு மாடு முட்டியதில் பெண் பலத்த காயம்

சென்னை: ஐஸ்ஹவுஸ் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த பசுமாடு முட்டியதில், பெண் பழ வியாபாரி பலத்த காயமடைந்தார். ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா, 30. இவர், மெரினா கடற்கரையில் பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை ஐஸ்ஹவுஸ் வெங்கட்ராமன் தெரு வழியாக நடந்து சென்றபோது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த பசு மாடு இவரை முட்டியது. இதில், மூக்கு தண்டுவடம் உடைந்து அவருக்கு ரத்தம் கொட்டியது. உடனே, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர். தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில், எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இப்பகுதியில் நுாற்றுக்கணக்கான மாடுகள் சுற்றி திரிகின்றன. ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அசம்பாவிதம் ஏதும் நடந்தால் மட்டும், ஒருசில நாட்கள் விழித்து கொள்கின்றனர். பின், மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்கின்றனர் என, பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை