| ADDED : ஜன 09, 2024 12:41 AM
திருவொற்றியூர், எண்ணுார், காட்டுகுப்பத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார், 42. இவரது மனைவி நந்தினி, 39; மீன் வியாபாரம் செய்து வந்தார். தம்பதிக்கு, மகன், மகள் உள்ளனர்.நேற்று மாலை, சம்பத்குமார் - நந்தினி தம்பதி, எண்ணுாரில் இருந்து திருவொற்றியூர் செல்வதற்காக, இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர்.எர்ணாவூர் மேம்பாலத்தில், பக்கவாட்டில் சென்ற கன்டெய்னர் லாரி உரசியதில், இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி, விபத்துக்குள்ளானது. இதில், சம்பத்குமார் படுகாயம் அடைந்தார்.நந்தினி, கன்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த, காட்டுகுப்பம் பகுதி மக்கள், அங்கு மறியலில் ஈடுபட்டனர். எண்ணுார் போலீசார் அவர்களை சமாதானம் செய்து, படுகாயம் அடைந்த சம்பத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.உயிரிழந்த நந்தினியின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த ரெட்ஹில்ஸ் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தப்பியோடிய கன்டெய்னர் லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.