வேளச்சேரி ஏரியில் பெண் சடலம் மீட்பு
வேளச்சேரி:வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் துர்கா, 65. கால் வலியால் மிகவும் சிரமப்பட்டுள்ளார். தீபாவளிக்கு, மகன் வீட்டுக்கு செல்ல முடியாததால், மிகவும் மன உழைச்சலில் இருந்த அவர், நேற்று அதிகாலை, வேளச்சேரி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். வேளச்சேரி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோனைக்கு அனுப்பினர். தற்கொலைக்கு முன், 'நான் ஏரியில் விழுந்து இறக்கிறேன்; என்னை எங்கும் தேட வேண்டாம்' என, வீட்டில் அவர் எழுதி வைத்துச் சென்ற கடிதம் சிக்கியுள்ளது. கடிதத்தை வைத்த இடத்தில், தன் தாலி மற்றும் நகைகளை கழற்றி வைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.