உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எம்.ஐ.டி., மேம்பாலத்தின் கீழ் பூங்கா ரூ.46 லட்சத்தில் பணிகள் துவக்கம்

எம்.ஐ.டி., மேம்பாலத்தின் கீழ் பூங்கா ரூ.46 லட்சத்தில் பணிகள் துவக்கம்

குரோம்பேட்டை, தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டலம், குரோம்பேட்டை, 35வது வார்டில், ஜி.எஸ்.டி.,- சிட்லப்பாக்கம்- ராஜேந்திர பிரசாத் சாலைகளை இணைக்கும் வகையில், எம்.ஐ.டி., மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.தினசரி லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தும் இம்மேம்பாலத்தின் கீழ் பகுதி பராமரிப்பின்றி, குப்பை கழிவு கொட்டும் இடமாக மாறிவிட்டது.மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பும் அதிகரித்து வருகிறது. இதனால், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையிடம் அனுமதி பெற்று, மேம்பாலத்தின் கீழ் பகுதியில், 46 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இதற்கான பூமி பூஜை, நேற்று நடந்தது. பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி, பணியை துவக்கி வைத்தார். மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இங்கு நடைபாதை, சிறுவர் பூங்கா, மின் விளக்கு, வண்ண வண்ண ஒவியங்கள் ஆகிய வசதிகள் அமைகின்றன. இரண்டு மாதங்களில் இப்பணியை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.இதேபோல், சீர்குலைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள குரோம்பேட்டை, ஸ்டேஷன் பார்டர் சாலையில், 20 லட்சம் ரூபாய் செலவில், சிமென்ட் சாலை அமைப்பதற்கான பணியும், நேற்று துவக்கி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை