மேலும் செய்திகள்
மாஞ்சா நுால் அறுத்து பெண் போலீஸ் காயம்
21-Jan-2025
அமைந்தகரை, அரும்பாக்கம், அசோகா நகரைச் சேர்ந்தவர் ராஜா, 50. இவர், அரும்பாக்கம், மின் வாரிய அலுவலகத்தில், 'லைன்' இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். நேற்று மாலை 6:30 மணியளவில், நெல்சன் மாணிக்கம் சாலையில் மின் பழுது ஏற்பட்டதாக புகார் வந்தது. இதையடுத்து, சக ஊழியரான குணசேகரன் என்பவருடன், ராஜா சம்பவ இடத்தில் உள்ள மின் மாற்றியில் ஏறி, பழுது பார்த்தார்.அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், மின்மாற்றியில் சிக்கிய ராஜாவின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Jan-2025