உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இறப்பு நடந்த வீட்டில் தகராறு ஆசாமிகளால் தொழிலாளி சீரியஸ்

இறப்பு நடந்த வீட்டில் தகராறு ஆசாமிகளால் தொழிலாளி சீரியஸ்

ஆதம்பாக்கம், இறப்பு நடந்த வீட்டில் அசிங்கமாக பேசியதை தட்டிக்கேட்ட தொழிலாளியை, சரமாரியாக தாக்கிய போதை ஆசாமிகள் மூவர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளானவர் 35 தையல்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். வேளச்சேரி, ஏ.ஜி.எஸ்., காலனியைச் சேர்ந்தவர் சண்முகம், 45; கட்டுமானத் தொழிலாளி. இவர், நேற்று மாலை ஆதம்பாக்கம், காந்தி நகர், ஏரிக்கரை தெருவில் உள்ள உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். அங்கிருந்த மூவர் மதுபோதையில், ஒருமையில் பேசி கூச்சலிட்டுள்ளனர். 'துக்க வீட்டில் பொது வெளியில் இப்படி பேசாதீர்' என, சண்முகம் தட்டிக்கேட்டுள்ளார். இதுதொடர்பாக, இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மூவரும் கற்கள், பீர்பாட்டிலால் சரமாரியாக தாக்கினர். இதில், சண்முகத்தின் உடல், முகம், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில், மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு, 35க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து விசாரித்த ஆதம்பாக்கம் போலீசார், சண்முகத்தை தாக்கிய ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த டேனியல், 23, பரத், 19, அரவிந்த், 18, ஆகியோரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை