மேலும் செய்திகள்
பட்டாசு வெடிப்பதில் தகராறு வாலிபர் மண்டை உடைப்பு
22-Oct-2025
கோயம்பேடு: கறி சூடாக இல்லை எனக் கூறியதால் ஏற்பட்ட தகராறில், கூலித்தொழிலாளியை கட்டையால் தாக்கியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கோயம்பேடு சந்தை பகுதியில் தங்கி, கூலி வேலை செய்து வருபவர் தினேஷ், 24. இவர், நேற்று முன்தினம், கோயம்பேடு சந்தை - பி சாலையில் உள்ள தள்ளுவண்டி கடைக்கு சாப்பிட சென்றார். அப்போது, அங்கு வாங்கிய கறி சூடு இல்லாததால், அதை சூடுபடுத்தி தரும்படி கடை உரிமையாளரான பாடிகுப்பத்தைச் சேர்ந்த சங்கர், 44, என்பவரிடம் கூறியுள்ளார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, மாறி மாறி தாக்கி கொண்டனர். ஆத்திரமடைந்த சங்கர் அருகில் இருந்த கட்டையால் தினேஷின் தலையில் அடித்தார். இதில், ரத்த காயமடைந்த தினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் 20 தையல் போடப்பட்டது. இரு தரப்பினர் அளித்த புகார் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Oct-2025