உலக ஸ்குவாஷ் வீரருக்கு ரூ.11 லட்சம் ஊக்கத்தொகை
சென்னை: சென்னையில் நடந்த உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டியில், இந்தியா தங்கம் வென்று சாதனை படைத்தது. அணியின் கேப்டனும், அர்ஜுனா விருது பெற்ற குருநானக் கல்லுாரி மாணவனுமான அபய் சிங்கிற்கு, வேளச்சேரியில் உள்ள கல்லுாரி வளாகத்தில், நேற்று பாராட்டு விழா நடந்தது. இதில், 11 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டார். மேலும் கேலோ இந்தியா, தேசிய போட்டிகளில் சாதனை படைத்த அதே கல்லுாரி மாணவர்களுக்கு, மொத்தம் 20 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.