ஆதரவற்ற விலங்குக்கு நீங்கள் உணவு தரலாம் * வங்கி கணக்கை துவக்கியது நல வாரியம்
சென்னை:'வீதிகளில் உணவின்றி சுற்றித்திரியும் விலங்குகளுக்கு, உணவுப் பண்டங்கள் வழங்க, நன்கொடையாளர்களிடம் நிதி திரட்டும் வகையில், வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளது' என, தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை:உரிமையாளர்களால் கைவிடப்பட்ட விலங்குகள் மற்றும் ஆதரவற்ற விலங்குகளாக உள்ள, பசு, நாய், பூனை, குதிரை போன்றவை சாலைகளில் சுற்றித் திரிவதால், மனிதர்களுக்கும், சில சமயம் விலங்குகளுக்கும் விபத்துகள் ஏற்படுகின்றன.இவற்றில் இருந்து பாதுகாக்கும் வகையிலும், அவற்றிற்கு உணவு, இருப்பிடம், மருத்துவ வசதிகளை வழங்கவும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தால் இயலாது. எனவே, நன்கொடையாளர்கள் வாயிலாக நிதி திரட்ட முடிவெடுத்துள்ளது.இதற்காக, சென்னை, தி.நகரில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கி கிளையில், 'டி.என்.ஏ.டபில்யூ.பி., - அனிமல் கேர் பவுண்டேஷன்' என்ற பெயரில், கணக்கு எண் - 44153955721, ஐ.எப்.எஸ்.சி., எண் - எஸ்.பி.ஐ.என்.,0001020, எம்.ஐ.சி.ஆர்., எண் - 60002054 கொண்ட வங்கி கணக்கு துவக்கியுள்ளது.மக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள், ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளிக்கும், இத்திட்டத்திற்கு ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக, தாராளமான நிதி உதவி வழங்கலாம்.வங்கி வரைவோலை மற்றும் காசோலைகளை, 'டி.என்.ஏ.டபில்யூ.பி., - அனிமல் கேர் பவுண்டேஷன்' எனும் பெயரில் எடுத்து, 'தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், இயக்குனர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள், 571, அண்ணா சாலை, சென்னை-35' என்ற முகவரிக்கு அனுப்பலாம்.நன்கொடையாக பெறப்படும் தொகை, தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தால், அந்தந்த பகுதிகளில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் வாயிலாக, வீதிகளில் உணவின்றி உள்ள விலங்குகளுக்காக, உணவுப் பண்டங்கள் வாங்கி, தேவைக்கேற்ப விநியோகிக்க பயன்படுத்தப்படும்.இவ்வாறு, வாரிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.