மேலும் செய்திகள்
ஏரியில் குளித்தவர் சடலமாக மீட்பு
24-Jan-2025
விருகம்பாக்கம், அய்யப்பன்தாங்கலில் இருந்து பிராட்வே நோக்கி செல்லும் தடம் எண் 26 மகளிர் சிறப்பு மாநகர பேருந்தில், நேற்று காலை விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே, ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏறினர்.அவர்கள் மகளிர் இருக்கையில் அமர்ந்து, ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வயதான பெண்கள் அமர சீட் அளியுங்கள் என, பெண்கள் கூறிய போது, 'ஓசி டிக்கெட்டில் தானே பயணம் செய்றீங்க' எனக் கூறியுள்ளனர்.இதை தட்டிக்கேட்ட பெண் பயணியை ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மிரட்டும் தொணியில் பேசியுள்ளனர். இதுதொடர்பாக, நடத்துநர் மற்றும் ஐந்து வாலிபர்கள் மீது, வழக்கு பதிந்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Jan-2025