மூதாட்டியிடம் அத்துமீறல் வாலிபர் கைது
ஆதம்பாக்கம்,ஆதம்பாக்கம் பகுதியில், 67 வயது மூதாட்டி தன் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 15ம் தேதி இரவு, மூதாட்டி வீட்டின் வாசலில் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தார்.அப்போது, மர்ம நபர் மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். சுதாரித்த மூதாட்டி சத்தம் போட்டதால், மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.இது குறித்த புகாரின் படி, ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து, மூதாட்டியிடம் அத்துமீற முயன்ற ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வேலு, 30, என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர் மீது அடிதடி உள்ளிட்ட ஐந்து வழக்குகள் உள்ளன.