உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

வேப்பேரி: சூளை, ராகவா தெருவில் வசிக்கும் தேவகி, 80, என்பவர் வீட்டிற்கு, 13ம் தேதி வந்த நபர், தன்னை மாநகராட்சி ஊழியர் என அறிமுகப்படுத்தி கொண்டார். வீட்டினுள் நுழைந்த அவர், கத்தியைக்காட்டி மிரட்டி, 2 சவரன் வளையல், 3 சவரன் செயினை, மூதாட்டியிடம் பறித்துச் சென்றார். வழக்குப்பதிவு செய்த வேப்பேரி போலீசார் விசாரணையில், புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், 30, மாநகராட்சி ஊழியர் போல் நடித்து, கத்திமுனையில் மூதாட்டியிடம் நகை பறித்தது தெரிந்தது. நேற்று, போலீசார் அவரை கைது செய்து, 5 சவரன் நகையை மீட்டனர். வேலை இல்லாதது, தீபாவளி பண்டிகையை கொண்டாட பணம் இல்லாததாலும் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக, அருண்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி