மேலும் செய்திகள்
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய மூவர் கைது
21-Mar-2025
அயனாவரம், அயனாவரத்தைச் சேர்ந்த, 21 வயது பெண், சில நாட்களுக்கு முன், அயனாவரம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:துரைப்பாக்கம், கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த விஷால் என்கிற யோகேஸ்வரன், 22, என்பவர், என்னை காதலித்து வந்தார்.அவர் கஞ்சாவுக்கு அடிமையானவர் என்பது தெரிந்து, அவரிடம் பேசுவதை தவிர்த்து விட்டேன். ஆனாலும், தொடர்ந்து பேசும்படி என்னை வற்புறுத்தி வந்தார்.கடந்த 11ம் தேதி, சாலையில் வழிமறித்து, திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். அதுமட்டுமின்றி, திருமணம் செய்ய மறுத்தால், முகத்தில் ஆசிட் வீசுவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.அதன்படி வழக்குப்பதிந்து விசாரித்த போலீசார், நேற்று யோகேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
21-Mar-2025