உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  3வது மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை

 3வது மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை

தாம்பரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர் ஆருண் பாஷா, 22. இவர், மேற்கு தாம்பரம், கோகுல் நகரில் உள்ள தன் சகோதரர் பாரத்துடன் தங்கி, 'நீட்' தேர்வுக்கு படித்து வந்துள்ளார். இவரும், அங்கு படித்த சஹானா என்பவரும், இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த வாரம் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை ஆருண் பாஷா, தன் மொபைல் போனில் சஹானாவுடன் பேசியுள்ளார். அப்போது, மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர், தான் தங்கியிருந்த கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து, கீழே குதித்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு, தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை