மேலும் செய்திகள்
பா.ஜ., நிர்வாகிக்கு வெட்டு கடை ஊழியருக்கு வலை
02-Sep-2025
சோழவரம்: செங்குன்றத்தைச் சேர்ந்தவர் அஜய், 31; தனியார் மருத்துவனை ஊழியர். மனைவியை பிரிந்த இவர், சோழவரம் அடுத்த சோலையம்மன் நகரில் உள்ள அண்ணன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, அண்ணி தில்ஷாத்தின் சகோதரி சல்மா, 35, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சல்மாவும், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், வேறு ஒருவருடன் சல்மா தொடர்பில் இருப்பதாக தெரிந்த அஜய், நேற்று முன்தினம் சல்மாவின் வீட்டிற்கு சென்றார். இதுகுறித்து கேட்டபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அஜய், கையில் வைத்திருந்த கத்தியால் சல்மாவை குத்தினார். தடுக்க வந்த அண்ணி தில்ஷாத்தையும் குத்திவிட்டு தப்பினார். அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சோழவரம் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில் விசாரணைக்கு பயந்து, புழல் ஏரியில் குதித்து அஜய் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Sep-2025