உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

வானகரம்: செங்குன்றத்தைச் சேர்ந்தவர் தமிழரசன், 31. ஆடி திருவிழாவை முன்னிட்டு, நேற்று இவர் மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பெருமாள் கோவில் தெருவில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று மதியம் மது போதையில் வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்த தமிழரசன், எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வானகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !