உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபர் வெட்டி கொலை மர்ம கும்பலுக்கு வலை

வாலிபர் வெட்டி கொலை மர்ம கும்பலுக்கு வலை

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே, வாலிபரை சரமாரியாக வெட்டி கொலை செய்த கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன், 22. இவர், டிராவல்ஸ் தொழில் நடத்தி வந்தார். நேற்று மாலை, இவர் அரும்பாக்கம் ஏரிக்கரை பகுதியில், உடல் முழுதும் வெட்டு காயங்களுடன் சுயநினைவு இன்றி கிடந்தார். அதை கண்ட பகுதி மக்கள், எளாவூர் சோதனைச்சாவடியில் உள்ள அவசர சிகிச்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர் இறந்தை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற ஆரம்பாக்கம் போலீசார், உடலை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மர்ம கும்பல் ஒன்று, முருகனை அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக, போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆரம்பாக்கம் போலீசார், தலைமறைவான கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை