மேலும் செய்திகள்
சிறுமி பலாத்கார வழக்கு: வாலிபருக்கு 'ஆயுள்'
26-Nov-2024
சிறுமி பலாத்கார வழக்கு வாலிபருக்கு 'ஆயுள்'
26-Nov-2024
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி, கடந்த 2018 ஏப்., 28ம் தேதி, வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பெபிரசாந்த் என்பவரது மகன் விஜயகுமார், 20, என்பவர், சிறுமியை கடத்திச் சென்று, அவரது வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்தார்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கு, செங்கல்பட்டு 'போக்சோ' நீதிமன்றத்தில், நீதிபதி நசீமாபானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால், ஓராண்டு மெய்க்காவல் சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி நசீமாபானு நேற்று தீர்ப்பளித்தார்.
26-Nov-2024
26-Nov-2024