உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கரூர் சம்பவம் பற்றி வதந்தி பரப்பிய யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது

கரூர் சம்பவம் பற்றி வதந்தி பரப்பிய யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது

சென்னை:கரூர் சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக ஏற்கனவே மூன்று சமூகவலைதள கணக்காளர்களை கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவரையும் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கரூரில் நடிகர் விஜய் பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்பியதாக, சென்னையில், 25 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அதில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பா.ஜ.,வின் கலை, கலாசார பிரிவு செயலர் சகாயம், 38, மாங்காடைச் சேர்ந்த த.வெ.க., உறுப்பினர் சிவநேசன், 36, ஆவடியைச் சேர்ந்த, 46வது வட்ட செயலர் சரத்குமார், 32 ஆகிய மூன்று பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி