உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சீயோன் குழும பள்ளிகள் பிளஸ் 2 தேர்வில் சாதனை

சீயோன் குழும பள்ளிகள் பிளஸ் 2 தேர்வில் சாதனை

சென்னை, நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், சேலையூர், மாடம்பாக்கம் மற்றும் செம்பாக்கம் சீயோன் பள்ளிகளில் தேர்வெழுதிய, 941 மாணவர்கள் அனைவரும், முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்து சாதனை படைத்துள்ளனர்.இதில், சேலையூர் பள்ளி மாணவி சாதனா, தமிழ் - 97, ஆங்கிலம் - 100, இயற்பியல் - 100, வேதியியல் - 100, கணிதம் - 100, உயிரியல் - 100 மதிப்பெண்களுடன், மொத்தம் 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி முகிலரசி, 600க்கு- 595 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.சேலையூர் சீயோன் பள்ளியில் தேர்வு எழுதிய 536 மாணவர்களில், 87 மாணவர்கள் வெவ்வேறு பாடங்களில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாடம்பாக்கம் சீயோன் பள்ளியில் தேர்வு எழுதிய 235 மாணவர்களில், 25 மாணவர்கள் வெவ்வேறு பாடங்களில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதில், மாணவி சாய் கமலதர்ஷினி, 600க்கு -595 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.சீயோன் மற்றும் ஆல்வின் குழுமப் பள்ளிகளின் தலைவர் டாக்டர் விஜயன் மற்றும் பள்ளி முதல்வர்கள், வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களையும், பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவ - மாணவிகளையும் இனிப்பு வழங்கி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை