உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் அரிசி,கோதுமை கடத்தல் மர்ம நபர்கள் தப்பியோட்டம்

ரேஷன் அரிசி,கோதுமை கடத்தல் மர்ம நபர்கள் தப்பியோட்டம்

கோவை : ரேஷன் அரிசி, கோதுமையை கடத்த முயன்றவர்கள் அதிகாரிகளைக் கண்டதும் அவற்றை ரோட்டில் போட்டு விட்டு தப்பியோ டினர். ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ரேஷன் கடையில் இருந்து கடத்தப்பட்ட அரிசி மூட்டைகள் வைசியாள் வீதி வழியாக வாகனத்தில் கொண்டு செல்லப்படுவதாக, மாவட்ட வழங்கல் அலுவலர் சங்கரபாண் டியனுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அரசுத் துறை ஜீப்பைக் கண்டதும் வைசியாள் வீதியில் அரிசி மூட்டைகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த சிலர் வாகனத்துடன் அங்கிருந்து தப்பினர். ரோட்டில் விட்டு செல்லப்பட்ட நான்கு மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர். இதே போல், தெற்கு உக்கடம் பகுதியில் கோதுமை மூட்டைகள் கடத்தப்படுவதாக பறக்கும் படை சிறப்பு தாசில்தார் மணிக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அதிகாரிகள், இரு சக்கர வாகனத்தில் கடத்தப்படவிருந்த ஒன்பது மூட்டை கோதுமை மற்றும் இரு சக்கர வாகனத்தை கைப்பற்றினர். கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் தப்பியோடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்