உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறைதீர் கூட்டத்தில் ரேஷன் கார்டு வினியோகம்

குறைதீர் கூட்டத்தில் ரேஷன் கார்டு வினியோகம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் பயனாளிளுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி மனுக்களை பெற்றார். குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 180 மனுக்கள் பெறப்பட்டன. அதில், முதியோர் உதவித்தொகை கேட்டு 118 மனுக்களும், இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு 55 மனுக்களும் இடம் பெற்றிருந்தன. குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் பயனாளிகள் இரண்டு பேருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ