உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடியிருப்பு உரிமையாளர் மீது பொதுமக்கள் புகார்

குடியிருப்பு உரிமையாளர் மீது பொதுமக்கள் புகார்

கோவை : பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த, அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் மீது குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். உடையாம்பாளையம், மீனா எஸ்டேட், செந்தில்நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. இதன் உரிமையாளர் ராஜ் நடராஜ்(55). இக்குடியிருப்புக்கு செல்ல வேறு வழி இருந்தும், பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலேயே தனிரோடு அமைத்து, கட்டுமான பணிக்கான பொருட்களை எடுத்துச் செல்கிறார். மழைக்காலத்தில் ரோடோரம் தேங்கும் நீர் வீடுகளுக்குள் புகுந்தது. அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ரோட்டை சரிபடுத்த சென்ற போது, தரக்குறைவாக பேசியுள்ளார். லே - அவுட் நிர்வாகிகள் புகார் கொடுத்ததையடுத்து, பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ